பள்ளிக்குள் புகுந்து 317 மாணவிகளை துப்பாக்கி முனையில் கடத்திய பயங்கரவாதிகள்!
நைஜிரியாவில் துப்பாக்கி ஏந்திய பயங்கரவாத கும்பல் ஒன்று, Zamfara மாநிலத்தில் உள்ள Jangebe அரசு பெண்கள் பள்ளிக்குள் புகுந்து 317 மாணவிகளைக் கடத்திச் சென்றுள்ளனர்.
நள்ளிரவில் பள்ளிக்கு சில வண்டிகளுடன் வந்த பயங்கரவாதிகள், துப்பாக்கி முனையில் மிரட்டி, சிறுமிகளை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. அதில் சில மாணவிகளை நடக்க வைத்து இழுத்துச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் Zamfara மாநில காவல் துறையினர் மற்றும் நைஜிரியா இராணுவம் இணைந்து 317 மாணவிகளை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நைஜிரியாவில் கடந்த ஒரு வாரத்தில் இது இரண்டாவது கடத்தல் ஆகும்.
கடந்த வாரம் Niger மாநிலத்தில், அடையாளம் தெரியாத பயங்கரவாத குழு ஒன்று, 27 பள்ளி மாணவர்கள் உட்பட 42 பேரை கடத்திச் சென்றுள்ளது. அப்போது ஒரு மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தில் கடத்தப்பட்டவர்களும் இன்னும் விடுவிக்கப்படவில்லை.