பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறிய கனடா... ஜஸ்டின் ட்ரூடோவை கடுமையாக விமர்சித்த இலங்கை அமைச்சர்
பயங்கரவாதிகளின் புகலிடமாக கனடா மாறியுள்ளது எனவும், ஆனால் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எந்த ஆதாரமும் இல்லாமல் மூர்க்கத்தனமான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் என்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.
தமக்கு வியப்பளிக்கவில்லை
கனடா - இந்தியா தொடர்பில் தற்போதைய சூழல் குறித்து இந்தியாவின் ANI செய்தி ஊடகத்திடம் பேசிய அவர், கனடா பிரதமரின் குற்றச்சாட்டுகள் தமக்கு வியப்பளிக்கவில்லை என்றார்.
@ani
மேலும், தீவிரவாதிகள் சிலர் கனடாவில் பாதுகாப்பான புகலிடத்தை கண்டுபிடித்துள்ளனர். ஆனால் அதில் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்காத கனேடிய பிரதமர் எந்த ஆதாரமும் இல்லாமல் சில மூர்க்கத்தனமான குற்றச்சாட்டுகளை இந்தியாவுக்கு எதிராக முன்வைத்துள்ளார்.
இதே நிலை தான் இலங்கையும் எதிர்கொண்டது என்றார் அமைச்சர் அலி சப்ரி. இலங்கையில் இன அழிப்பு நடந்ததாக அப்பட்டமான பொய்யை கனடா வெளியிட்டது என்றார். எங்கள் நாட்டில் இனப்படுகொலை நடக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரியும் எனவும் அமைச்சர் சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
காலிஸ்தான் பிரிவினைவாதியும் இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் தேடப்படும் குற்றவாளியுமான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலை தொடர்பில் செப்டம்பர் 18ம் திகதி கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா மீது குற்றச்சாட்டை முன்வைத்தார்.
ஆதாரபூர்வமற்ற குற்றச்சாட்டுகள்
ஜூன் 18ம் திகதி கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் மர்ம நபர்களால் ஹர்தீப் நிஜ்ஜர் படுகொலை செய்யப்பட்டார். ஆனால் இந்த விவகாரத்தில் தங்களுக்கு பங்கில்லை என இந்தியா மறுத்துள்ளது.
@ap
இந்த நிலையில், கனேடிய நாடாளுமன்றத்தில் முன்னாள் நாஜி படை வீரர் ஒருவருக்கு மரியாதை செலுத்தப்பட்டதை குறிப்பிட்ட அமைச்சர் சப்ரி, இதுபோன்ற சூழல் தான் கனடாவில் உள்ளது எனவும், சில சமயங்களில் பிரதமர் ட்ரூடோ ஆதாரபூர்வமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதில் எனக்கு ஆச்சரியம் இல்லை என்றார்.
கனடா பிரதமர் ட்ரூடோவின் இன அழிப்பு குற்றச்சாட்டு என்பது இலங்கைக்கும் கனடாவுக்குமான நல்லுறவை சிதைத்தது எனவும் அமைச்சர் சப்ரி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |