சுவிஸில் பொலிஸ் வாகனம் மீது மோதிய டெஸ்லா கார்! நூலிழையில் உயிர் தப்பிய காவலர்
சுவிஸில் நடந்த டெஸ்லா கார் விபத்தில் போக்குவரத்து காவலர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.
டெஸ்லா கார் விபத்து
சனிக்கிழமை அதிகாலை 6 மணியளவில் சுவிட்சர்லாந்தின் மியுன்ச்விலென்(Münchwilen) A1 நெடுஞ்சாலையில் 58 வயதுடைய நபர் ஓட்டி வந்த டெஸ்லா கார் ஒன்று பொலிஸ் வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

ஏற்கனவே அப்பகுதியில் ஏற்பட்ட மற்றொரு சாலை விபத்தை தொடர்ந்து அப்பகுதிக்கான போக்குவரத்தை தடுத்து நிறுத்துவதற்காகவும், எச்சரிக்கை விடுப்பதற்காகவும் பொலிஸார் வாகனமானது சாலையில் நிறுத்தப்பட்டிருந்தது.
அதிர்ஷ்டவசமாக, சாலை போக்குவரத்தை சீர் செய்து வந்த காவலர் டெஸ்லா கார் கட்டுப்பாடு இல்லாமல் வருவதை உணர்ந்து கொண்டு துள்ளி குதித்து விலகியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
விசாரணை தீவிரம்

இந்த விபத்தை தொடர்ந்து, இதனால் ஏற்பட்ட சேதாரம் சுமார் 1,00,000 சுவிஸ் பிராங்குகள்(1.25 லட்சம் டொலர்கள்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
விபத்திற்கு கார் ஓட்டுநர் காரணமாக அல்லது டெஸ்லா காரின் தானியங்கி ஓட்டுநர் முறை குறைப்பாட என துர்காவ் மாகாண காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |