கனடாவில் டெஸ்லா வாகனங்கள் விலை 21 சதவீதம் அதிகரிப்பு: புதிய விலை விவரங்கள் வெளியீடு
கனடாவில் டெஸ்லா வாகனங்களின் விலைகளை 21 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
கனடா அரசு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் வாகனங்களுக்கு 25 சதவீதம் வரி விதித்ததைத் தொடர்ந்து, இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
Model 3 Long Range AWD இப்போது 79,990 டொலராக விற்பனை செய்யப்படுகிறது, இது முந்தைய விலையான 68,990 டொலருடன் ஒப்பிடுகையில் 10,000 டொலர் அதிகம்.
Model 3 Performance-ன் விலையும் 79,990 டொலரிலிருந்து 89,990 டொலராக உயர்ந்துள்ளது. Model 3 Rear-Wheel Drive மொடல் தற்போது விற்பனைக்கு இல்லையென குறிப்பிடப்பட்டுள்ளது.
Model Y Long Range இப்போது 84,990 டொலராகும் - முன்னதாக இதன் விலை 69,990 டொலராக இருந்த நிலையில், தற்போது 15,000 டொலர் அதிகரித்துள்ளது.
மேலும், உயர்நிலை மொடல்களின் விலையும் கூடியுள்ளது:
Model S – $133,990 (+$19,000)
Model S Plaid – $154,990 (+$18,000)
Model X AWD – $140,990 (+$19,000)
Model X Plaid – $161,990 (+$19,000)
Cybertruck-ல் மிகப்பெரிய விலை உயர்வு ஏற்பட்டுள்ளது:
All-Wheel Drive – $139,990 (+21.7%)
Cyberbeast – $167,990 (+21.7%)
டெஸ்லா, தற்போதைய விலைவாசியை சமாளிக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு “வரிவிதிப்பிற்கு முந்தைய விலை” கொண்ட இன்வெண்டரி வாகனங்களை வாங்க ஊக்குவிக்கிறது. இது புதிய ஆர்டர்களை விட கணிசமான சலுகையுடன் கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Tesla Canada price hike 2025, Tesla price increase Canada, Tesla new car prices Canada, Tesla Model 3 new price Canada, Tesla Model Y price hike, Tesla Cybertruck price Canada, Canada vehicle import tariffs, Tesla pre-tariff inventory Canada, Tesla Canada latest news, Tesla 21 percent price increase