எலான் மஸ்கின் அரசியல் கருத்துகள் - ஐரோப்பாவில் Tesla விற்பனை கடும் வீழ்ச்சி
எலான் மஸ்கின் அரசியல் கருத்துகள் காரணமாக ஐரோப்பாவில் Tesla கார்கள் விற்பனை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
Tesla நிறுவனத்தின் மின்சார வாகனங்களின் விற்பனை ஐரோப்பாவின் முக்கிய சந்தைகளான பிரித்தானியா மற்றும் ஜேர்மனியில் கடந்த ஜூலை மாதத்தில் 55-60 சதவீதம் வரை குறைந்துவிட்டது.
எலான் மஸ்க் தனது அரசியல் கருத்துகளை வெளிப்படையாக வெளியிடுவதும், மற்றும் டொனால்ட் ட்ரம்பை ஆதரிப்பதும் வாடிக்கையாளர்களை பின்வாங்கச் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜேர்மனியில் BEV வாகன விற்பனை 58 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், டெஸ்லா விற்பனை 55 சதவீதம் குறைந்துள்ளது. ஜூலை மாதத்தில் டெஸ்லா 1,110 யூனிட்கள் மட்டுமே பதிவு செய்துள்ளது.
பிரித்தானியாவில் இது 60 சதவீதம் குறைந்து 987 யூனிட்களாக உள்ளது. இதே நேரத்தில் சீனாவின் BYD நிறுவனம் ஜேர்மனியில் 5 மடங்கு, பிரித்தானியாவில் 4 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது.
விற்பனையில் ஏற்பட்ட வீழ்ச்சியை Model Y மேம்படுத்தப்பட்ட பதிப்பும் திருத்த முடியவில்லை. டெஸ்லாவின் எதிர்காலம் தற்போது அதன் சுய இயக்கும் (Self-Driving) தொழில்நுட்பத்தில் தான் இருக்கிறது என நிபுணர்கள் கருதுகின்றனர்.
New AutoMotive நிறுவனர் கூறுகையில், நிறுவனம் ஏற்கனவே “புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கக்கூடிய மொடல்களுக்கு பதிலாக, டெஸ்லா தற்போது முழுக்க AI சார்ந்த டிரைவிங் தொழில்நுட்பத்திற்கே முக்கியத்துவம் தருகிறது” என கூறியுள்ளார்.
பிரித்தானியாவில், மொத்த கார்களின் பதிவு 5 சதவீதம் குறைந்துள்ளன. ஆனாலும், மின்சார வாகன விற்பனை 9.1 சதவீதம் உயர்ந்துள்ளது. BEV வாகனங்களின் பங்கு 2025-ல் 23.8 சதவீதமாக உயரும் என கணிக்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Tesla Europe sales drop, Elon Musk politics impact Tesla, Tesla vs BYD sales Germany, UK EV market July 2025, Model Y sales fall Europe, Electric car market trends 2025, BYD growth in UK and Germany, EV sales July 2025 data, Tesla registration decline, Elon Musk Trump endorsement