கடற்கரையில் ஒதுங்கிய ஆடைகள் இல்லாத அழகான பெண்ணின் சடலம்: விசாரணையில் அதிர்ந்த அதிகாரிகள்
பேங் சான் கடற்கரையில் பெண்ணின் நிர்வாண சடலம் - திகிலடைந்த மக்கள்
ஏதேனும் ஆற்றில் அதன் உரிமையாளர் வீசியிருக்கலாம், கடைசியில் கடலில் வந்து சேர்ந்துள்ளது
தாய்லாந்து கடற்கரையில் ஒதுங்கிய ஆடைகள் இல்லாத பெண்ணின் சடலம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் அதிர்ந்து போயுள்ளனர்.
குறித்த பெண்ணின் சடலமானது உண்மையில் தத்ரூபமாக வடிமைக்கப்பட்ட பாலியல் பொம்மை எனவும் அதன் மதிப்பு 469 பவுண்டுகள் எனவும் தெரியவந்துள்ளது.
ஆகஸ்ட் 18ம் திகதி, பேங்காக்கிலிருந்து கிழக்கே 100 கிமீ தொலைவில் உள்ள சோன்புரியின் பேங் சான் கடற்கரையில் பெண்ணின் நிர்வாண சடலம் ஒன்றை காண நேர்ந்த மக்கள் திகிலடைந்துள்ளனர்.
ஒரு நிர்வாணப் பெண் தலையை மறைத்தபடி சட்டையுடன் கரையில் இறந்து கிடந்தது போல் தோன்றியது. இதனையடுத்து அதிர்ச்சியில் இருந்து மீளாத மக்கள் அவசர உதவி மருத்துவக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்க,
பெண்ணின் சடலம் என கருதி விரைந்து வ்னத அவர்கள், முதற்கட்ட பரிசோதனையில் அது பாலியல் பொம்மை என்பதை உறுதி செய்தனர். ஜப்பானில் தயாரிக்கப்பட்ட அந்த பொம்மையின் விலை 469 பவுண்டுகள் எனவும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் தெரிவிக்கையில், உண்மையில் ஏதேனும் ஆற்றில் அதன் உரிமையாளர் பொம்மையை வீசியிருக்கலாம் எனவும், கடைசியில் கடலில் வந்து சேர்ந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
பொம்மையின் தலை அகற்றப்பட்ட நிலையில் இருந்தாலும், பொலிசார் அந்த பொம்மையை காவல் நிலையத்தில் பாதுகாக்க முடிவு செய்துள்ளதுடன், அதன் உண்மையான உரிமையாளர் உரிமை கோர வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.