ஒரு வாய் சாப்பிட்டாலே போதும்... ஆண்டுக்கு 20,000 உயிர்களை பலிவாங்கும் பிரபலமான உணவு
சுற்றுச்சூழல் மொத்தமாக பாதிப்புக்குள்ளான இந்த காலகட்டத்தில் குறிப்பிட்ட சில உணவுகள் ஆபத்தை தாங்கியே உள்ளது என்றாலும், தாய்லாந்தின் பிரபலமான இந்த உணவு ஒரு வாய் சாப்பிட்டாலே உயிருக்கு உலை வைத்துவிடும் என்கிறார்கள்.
ஆபத்தான உணவு
தாய்லாந்து மக்கள் அதிகமாக விரும்பும் மீன் உணவான koi என்பது தான் சுவை மிகுந்த அந்த ஆபத்தான உணவு. இந்த உணவு காரணமாக ஆண்டுக்கு 20,000 மக்கள் பலியாகும் ஆபத்து தொடர்கிறது.
@afp
இந்த உணவானது தாய்லாந்தின் பிரபலமான உணவகங்களில் பரிமாறப்படுவதில்லை. ஆனால் Khon Kaen பிராந்தியத்தில் மக்களால் மிகவும் விரும்பி சாப்பிடப்படும் உணவு இது.
koi என்பது அடிப்படையில் மூலிகைகள், மசாலா மற்றும் எலுமிச்சை சாறுடன் அரைக்கப்பட்ட சமைக்காத மீன் உணவாகும். சில நிமிடங்களில் தயார் செய்துவிட முடியும் என்பதால் மில்லியன் கணக்கான தாய்லாந்து மக்கள் விரும்பி உண்ணுகிறார்கள்.
அதுவும் தாய்லாந்தின் ஏழைகள் மிகுந்த Isaan பகுதியில் இந்த உணவு மிகவும் பிரபலம். இந்த உணவால் கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் என கூறும் நிலையில், இதில் பயன்படுத்தும் மீனால் எந்த பாதிப்பும் இல்லை என்றே உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிழைப்பது கடினம்
ஆனால் அந்த மீனுக்குள் வசிக்கும் ஒட்டுண்ணி வகை தட்டைப்புழுக்கள் தான் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஒட்டுண்ணி வகை தட்டைப்புழுக்கள் Mekong பிராந்தியத்தில் உள்ள நன்னீர் மீன் வகைகளில் காணப்படுகிறது.
@afp
இங்குள்ள மீன்களை உணவாகக் கொள்ளும் Isaan பகுதி மக்கள் ஆசன வாய் புற்றுநோயால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இப்பகுதியில் உள்ள மருத்துவர் ஒருவர், தமது பெற்றோர்களை கல்லீரல் புற்றுநோய்க்கு பலிகொடுத்த நிலையில், இங்குள்ள மக்களை அந்த உணவு எடுத்துக்கொள்வதில் இருந்து தடுத்து வருகிறார்.
மக்களின் அறியாமையும் இயலாமையும் தான் பெரும் எண்ணிக்கையிலான இறப்புகளுக்கு காரணம் என அவர் குறிப்பிடுகிறார். கல்லீரல் புற்றுநோய் என்பது உடனடியாக உரிய சிகிச்சையளிக்கப்படாவிட்டால் பிழைப்பது கடினம் என்றே கூறுகின்றனர்.
மட்டுமின்றி, அனைத்து புற்றுநோய்களிலும் மிகக் குறைந்த உயிர் பிழைப்பு விகிதங்கள் கொண்டது இந்த நோய் எனவும் கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |