தடுப்பூசி போட்டால் மாடு பரிசு! பிரபல நாட்டில் அதிரடி அறிவிப்பு
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் உள்ள மாவட்ட நிர்வாகம் அதிரடி பிரச்சாரம் ஒன்றை தொடங்கியுள்ளது.
அதாவது, அடுத்த மாதம் முதல் வாரம் வாரம் குலுக்கல் முறையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட கிராமவாசிகளில் ஒருவரை தேர்ந்தெடுத்து, அவருக்கு 10,000 தாய் பாத் (225 பவுண்ட்) மதிப்புள்ள மாடு ஒன்றை பரிசாக வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மக்களிடையே தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் வகையில் Chiang Mai மாகாணத்தில் உள்ள Mae Chaem மாவட்ட நிர்வாகமே இவ்வாறு அறிவித்துள்ளது.
43,000 பேர் உள்ள மாவட்டத்தில் 24 வாரங்களுக்கு என வாரம் ஒருவருக்கு மாடு பரிசாக வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த வாரம் பரிசு திட்டம் குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்து கடந்த இரண்டு நாட்களில் தடுப்பூசி போட பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை நூற்றுக்கணக்கிலிருந்து ஆயிரக்கணக்காக அதிகரித்துள்ளதாக Mae Chaem மாவட்ட நிர்வாக தலைவர் Boonlue Thamtharanurak தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தில் உள்ள மற்ற மாகாணங்களும் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்க தங்க நகை, சலுகை கூப்பன்கள் மற்றும் ரொக்கம் என பரிசுகளை அறிவித்து பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளன.
தாய்லாந்தின் 66 மில்லியன் மக்கள்தொகையில் குறைந்தது 1.64 மில்லியன் பேர் ஏற்கனவே முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுள்ளனர், மேலும் இதுவரை 7 மில்லியனுக்கும் அதிகமானோர் தடுப்பூசி போட பதிவு செய்துள்ளனர்.