தீவிரமடையும் தாய்லாந்து விவகாரம்... பயண எச்சரிக்கை விடுத்த இந்திய தூதரகம்
தாய்லாந்து-கம்போடியா எல்லையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், பயண எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம்.
அமைதியின்மை
இந்திய சுற்றுலாப் பயணிகள் விழிப்புடன் இருக்கவும், தாய்லாந்து சுற்றுலா ஆணையம் உட்பட உத்தியோகப்பூர்வ தாய்லாந்து தகவல்கள் மூலம் உறுதி செய்துகொள்ளவும் வலியுறுத்தியுள்ளனர்.
தாய்லாந்து-கம்போடிய எல்லையில் தொடர்ந்து நிலவும் அமைதியின்மை காரணமாக, உபோன் ரட்சதானி, சுரின், சிசாகெட், புரிராம், சா கேயோ, சாந்தபுரி மற்றும் டிராட் ஆகிய ஏழு மாகாணங்களில் உள்ள பல சுற்றுலா தலங்கள் தற்போது பார்வையிட பரிந்துரைக்கப்படவில்லை என்று தாய்லாந்து சுற்றுலா ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தாய்லாந்து-கம்போடியா எல்லைக்கு அருகே நடந்த இராணுவ மோதல்களில் 14 தாய்லாந்து மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 46 பேர் காயமடைந்தனர் என்று பொது சுகாதார அமைச்சகத்தின் துணை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஆனால், வியாழக்கிழமை மாலை வரையில் கம்போடியா தங்களது பக்கம் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை. பொதுமக்கள் மற்றும் ஒரு மருத்துவமனை மீது கம்போடிய இராணுவத்தின் தாக்குதல்களை கடுமையாக கண்டித்துள்ள தாய்லாந்தின் பொது சுகாதார அமைச்சர் Somsak Thepsuthin,
போர்க்குற்றச் செயல்
கம்போடிய அரசாங்கம் இந்தப் போர்க்குற்றச் செயல்களை உடனடியாக நிறுத்தி, அமைதியான சகவாழ்வுக் கொள்கைகளை மதிக்கத் திரும்ப வேண்டும் என்று வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
புதன்கிழமை நடந்த கண்ணிவெடி வெடிப்பில் ஐந்து தாய்லாந்து வீரர்கள் காயமடைந்ததைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது இந்த சம்பவம் இரு தரப்பினராலும் தூதர்களை வெளியேற்றவும், கடுமையான தூதரக மோதலையும் தூண்டியது.
மட்டுமின்றி, கம்போடியா புதிய ரஷ்ய தயாரிப்பு கண்ணிவெடிகளை விதைப்பதாக தாய்லாந்து அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர், அதே நேரத்தில் கம்போடியா அந்தக் கூற்றுக்களை ஆதாரமற்றவை என்று நிராகரித்தது, கடந்த கால மோதல்களில் எஞ்சிய கண்ணிவெடிகள் என்றும் விளக்கமளித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |