மூன்றாவது நாட்டின் தலையீடு தேவையில்லை... சீனா, அமெரிக்கா உதவியை மறுத்த குட்டி நாடு
எல்லைப் பிரச்சினை தொடர்பாக தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே கடந்த இரண்டு நாட்களாக மோதல் மிகவும் தீவிரமாகியுள்ளது.
அமெரிக்கா, சீனா
இதுவரை 14 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள் என்றும் கூறப்படுகிறது. எல்லையில் இரு நாட்டு வீரர்களும் தீவிர துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.
சிறிய துப்பாக்கிகளைப் பயன்படுத்தி வருவதுடன், பீரங்கி குண்டுகளை வீசியுள்ளனர், அத்துடன் ராக்கெட் குண்டுகளையும் வீசியுள்ளனர். நிலைமை மோசமடைந்ததால், அமெரிக்கா, சீனா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்க உதவ முன்வந்தன.
ஆனால் குட்டி நாடான தாய்லாந்து, சீனா மற்றும் அமெரிக்கா இரண்டிற்கும் வலுவான மற்றும் தெளிவான பதிலடியை அளித்தது, எந்த மூன்றாம் தரப்பு உதவியும் தேவையில்லை என்றும் அறிவித்துள்ளது.
நேரடிப் பேச்சுவார்த்தைகள்
பின்னர், மலேசியாவின் மத்தியஸ்தம் மற்றும் அமைதியான தீர்வை எட்ட தாய்லாந்து ஒப்புக்கொண்டது. கம்போடியா விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய மற்ற நாடுகளின் கோரிக்கைகளை நிராகரித்ததாக தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, கம்போடியா தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தைகள் மூலம் மட்டுமே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அமைச்சகம் தெளிவுபடுத்தியது.
இதனிடையே, கம்போடியாவின் எல்லையில் அமைந்துள்ள எட்டு மாவட்டங்களில் தாய்லாந்து நிர்வாகம் இராணுவச் சட்டத்தை அமுலுக்கு கொண்டுவந்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |