Thailand Open 2024: சீனாவை தோற்கடித்து கோப்பையை கைப்பற்றிய இந்தியா!
இந்தியாவின் நட்சத்திர இரட்டையர் ஆட்டக்காரர்களான சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி மற்றொரு பட்டத்தை வென்றனர்.
தாய்லாந்து ஓபன் இறுதிப் போட்டியில் இந்த ஜோடி அசத்தல் வெற்றியுடன் கோப்பையை முத்தமிட்டது.
சாத்விக்-சிராக் ஜோடி (Satwiksairaj Rankireddy and Chirag Shetty), சீன ஜோடியான சென் போ யாங் மற்றும் லீ யிக்கு (Chen Bo Yang and Liu Yi) எதிராக விளையாடி பட்டத்தை வென்றது.
சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் சாத்விக்-சிராக் 30 நிமிடங்களில் எதிரணியைத் தோற்கடித்தது.
சீன தைபே ஜோடியான மிங் சீ மற்றும் தாங் கிவியை 21-11, 21-12 என்ற செட் கணக்கில் தோற்கடித்தனர்.
இறுதிப் போட்டியிலும் சாத்விக்-சிராக் ஜோடி அதிரடியாக விளையாடியது. தொடர் செட்களில் பலத்தை வெளிப்படுத்திய சாத்விக்- சிராக் ஜோடி 21-15, 21-15 என்ற கணக்கில் சென்-லீ ஜோடியை வீழ்த்தியது.
இந்த வெற்றி, பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு செல்வதற்கான மிகுந்த தன்னம்பிக்கையை இருவருக்கும் அளித்துள்ளது.
SatChi won the Thailand Open and Reclaims their World No 1 Ranking in Men's Doubles 🤩🇮🇳
— The Khel India (@TheKhelIndia) May 19, 2024
The defeated 🇨🇳 Chen/Liu 21-15,21-15 in Thailand Open FINAL in straight games 💥🔥
Second Thailand Open title for Satwik & Chirag 🏆#BadmintonIndia #BWF #ThailandOpen pic.twitter.com/HwDnHFHtaD
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Satwiksairaj Rankireddy and Chirag Shetty, Satwik-Chirag pair clinches Thailand Open 2024, India vs China, Thailand Open Badminton