இது அரண்மனை அல்ல.. என்னவென்று தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்!
தாய்லாந்தில் தங்க நிறத்தில் கழிப்பறையின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தங்க நிறத்தில் ஜொலிக்கும் கட்டிடம்.. சுற்றிலும் பச்சை செடிகள்.. பார்ப்பதற்கு விலை உயர்ந்த அரண்மனை என்று நினைக்கலாம். Instagram பயனர் Krishangi (krishangiisaikia) பகிர்ந்துள்ள வீடியோ நிச்சயமாக உங்களை ஆச்சரியப்படுத்தும்.
அது அரண்மனை அல்ல, கழிவறை
வீடியோவில், ஒரு கழிவறை ஒரு அதிர்ச்சியூட்டும் வடிவமைப்பில் தங்க நிறத்தில் ஜொலிக்கிறது. கழிவறைக்கு வெளியே தோட்டம் தெரியும். இக்கட்டமைப்பைப் பார்த்தால், எவ்வளவு பிரமாதமாக கட்டப்பட்டிருக்கிறது என்பதை உணரலாம்.
கிருஷாங்கி அந்த வீடியோவில் 'நான் கழிவறையில் வீடியோ எடுப்பேன் என்று நினைக்கவே இல்லை. ஆனால் இன்று என்னால் எடுக்காமல் இருக்க முடியவில்லை" என்று கூறுகிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கழிவறை பிரமாதம்.. இது ஒரு கழிவறை வாஷ்ரூம் என்பதை நம்பவே முடியவில்லை என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கழிவறை சுவர் வடிவமைப்புகள் அவற்றின் மாயாஜால அழகிற்காக பாராட்டப்படுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Thailand washroom, Thailand Palace like washroom, Thailand bathroom, Royal Bathroom