அண்டை நாட்டு தலைவரை மாமா என அழைத்த விவகாரம் - ஆசிய நாடொன்றின் பெண் பிரதமர் இடைநீக்கம்
தாய்லாந்து பிரதமர் பேதோங்தான் சினவத்ரா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பேதோங்தான் சினவத்ரா
தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில், கடந்த ஆகஸ்ட் 2024 முதல் பேதோங்தான் சினவத்ரா(Paetongtarn Shinawatra) பிரதமராக பதவி வகித்து வருகிறார்.
கம்போடியா நாட்டின் முன்னாள் தலைவருடன், இவர் தொலைபேசியில் பேசிய உரையாடல் கசிந்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கம்போடியா நாட்டின் முன்னாள் தலைவரான ஹுன் சென் உடன் அவர் நிகழ்த்திய உரையாடலில், அவரை மாமா என அழைத்துள்ளார். மேலும், தாய்லாந்து ராணுவ தாய்லாந்து இராணுவத் தளபதியை எதிரி என விமர்சித்துள்ளார்.
இந்த உரையாடல் கசிந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் கூடி, பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா பதவி விலக வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இடைநீக்கம்
பேடோங்டர்ன் நெறிமுறைகளை மீறியதால் அவரை பதவி நீக்கம் செய்யக் கோரி, 36 செனட்டர்கள் தாக்கல் செய்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததில், பேதோங்தான் சினவத்ரா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
துணை பிரதமராக இருந்த சூர்யா ஜுவான்க்ரூங்ருவாங்கிட் (Suriya Juangroongruangkit), இடைக்கால பிரதமராக பதவியேற்றுள்ளார்.
அமைச்சரவை மாற்றத்திற்கு, தாய்லாந்து மன்னர் Maha Vajiralongkorn ஒப்புதல் வழங்கியுள்ளார்.
பேதோங்தான் சினவத்ராவின் தந்தையும், முன்னாள் பிரதமருமான தாக்சின் ஷினாவத்ராவும், அரச வம்சத்தை விமர்சித்ததாக நீதிமன்ற வழக்கை எதிர்கொண்டு வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |