விஜய் நடிக்கும் கடைசி படமான தளபதி 69 படத்தின் பெயர் இதுதான்.., என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய்.
விஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளியான தி கோட் திரைப்படம் வரவேற்பை பெற்றதை அடுத்து, அவர் உடனடியாக ஹெச்.வினோத்துடன் கைக்கோர்த்தார்.
தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். வில்லனாக பாபி டியோல் நடிக்கிறார். இப்படத்தின் பூஜை சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது.
இது விஜய்யின் அரசியல் கட்சி அறிவிப்புக்கு பிறகு எடுக்கப்பட்டிருக்கும் படம் என்பதால், இதிலும் விஜய் நிறைய அரசியல் பேசியிருப்பார் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், அரசியல் கட்சியை தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், விரைவில் சினிமாவை விட்டு விலக இருக்கிறார்.
இந்நிலையில், அவர் கடைசியாக நடித்து வரும் படம்தான், "தளபதி 69".
இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல்தான் இப்போது வெளியாகி இருக்கிறது.
விஜய்யின் தளபதி 69 படத்தின் பெயர், "நாளைய தீர்ப்பு" என சொல்லப்படுகிறது. இதற்காக ரசிகர்கள் உருவாக்கியிருக்கும் போஸ்டர்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஜனவரி 26ஆம் திகதி குடியரசு தினத்தையொட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் ஹீரோவாக அறிமுகமானது 1992ஆம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு படம் மூலமாகத்தான்.
இந்த படத்தில் நடிக்கும் போது அவருக்கு 18 வயது. தற்போது தளபதி 69 படத்திற்கும் அதே பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |