அதனால்தான் அவளைக் கொன்றேன்... பிரித்தானிய இளம்பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் பிளேபாயின் வாக்குமூலம்
பிளேபாயாக வலம் வந்த இளைஞர் ஒருவர், தன்னை திருமணம் செய்ய மறுத்ததாலேயே பிரித்தானிய இளம்பெண்ணைக் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
பிரித்தானிய குடிமகளான Mayra Zulfiqar (25), தன் உறவினர் ஒருவரின் திருமணத்துக்காக பாகிஸ்தான் வந்த நிலையில், தான் தங்கியிருந்த வீட்டில் இரத்த வெள்ளத்தின் நடுவே சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
வேலைக்காரப்பெண் ஒருவர் வேலைக்கு வந்தபோது, Mayraவின் உடலைக்கண்டுபிடித்துள்ளார். அவரது உடல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு துப்பாக்கிக்குண்டுக் காயங்களுடன் கிடந்தது தெரியவந்தது.
இந்த வழக்கு தொடர்பாக பொலிசார் Zahir Jadoon (26) மற்றும் Saad Butt (28) என்னும் இருவரை தேடி வந்தார்கள். அவர்கள் இருவருடனுமே Mayra பழகியதாகவும், அவர்கள் தங்களைத் திருமணம் செய்ய கோரியபோது Mayra மறுத்துவிட்டதாகவும் முன்னர் கூறப்பட்டது.
அதில் Zahir கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார். தற்போது அவர், தான்தான் Mayraவைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
ஒரு பிளேபாயாக வலம் வந்த தன்னை Mayra நிராகரித்ததுடன், தன்னை வீடியோ ஒன்றைக் காட்டி பிளாக்மெயில் செய்து வந்ததாகவும், பொறுமையிழந்து அவரை கொலை செய்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்ததாக கருதப்படும் Saad Butt, தானாகவே முன்வந்து பொலிசாரிடம் சரணடைந்துவிட்டார். அவர், தனக்கும், Mayra கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். பொலிஸ் விசாரணை தொடர்கிறது.