அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியால் பயனில்லை! தொடக்கத்திலேயே முற்றுப்புள்ளி வைத்த தென்னாபிரிக்கா
தென்னாபிரிக்கா அதன் மக்களுக்கு அடுத்த வாரம் தடுப்பூசி போட திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது பிரித்தானிய நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவிடமிருந்து 1 மில்லியன் டோஸ்களைப் பெற்றுள்ளது.
அனால், சுமார் 2000 பேரைக் கொண்டு நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி 501.V2 அல்லது B.1.351 என்றும் அழைக்கப்படும் தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசுக்கு எதிராக மிகக் குறைவான பாதுகாப்பையே தரக்கூடும் என்ற ஏமாற்றமளிக்கக்கூடிய முடிவு வெளிவந்தது.
தென்னாபிரிக்காவில் பதிவாகியுள்ள 90% புதிய பாதிப்புகள் 501.V2 எனும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் என்பதால், அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை செலுத்தி பயனில்லை என்ற நிலையில், அடுத்த வாரம் தொடங்கவிருந்த தடுப்பூசி விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆய்வு முடிவுகளின் அடிப்படியில், தற்போது வாங்கப்பட்டுள்ள ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை எவ்வாறு சிறப்பாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது குறித்த மேலதிக ஆலோசனைகளை அரசாங்கம் நடத்தவுள்ளதாக தென்னாபிரிக்க சுகாதார அமைச்சர் ஸ்வேலி ம்கைஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஜான்சன் அண்ட் ஜான்சன் மற்றும் ஃபைசர் தயாரிக்கும் தடுப்பூசிகளை வரும் வாரங்களில் தென்னாபிரிக்காவில் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.