கலர் கலராய் வெடித்த வெடிகுண்டுகள்! ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் நடத்திய தாக்குதல் வீடியோ
ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைன் செய்துள்ள சம்பவத்தின் ஒரு வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
உக்ரைக்குள் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி நுழைந்த ரஷ்ய படையினர் 148 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த போரில் இரு தரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ரஷ்யாவிற்கு அஞ்சாமல் பல நாடுகளின் உதவியுடன் உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
அந்த வகையில் உக்ரைனின் முக்கிய பகுதியான டான் பாஸில் அந்நாட்டு படையினர் ரஷ்யாவுக்கு எதிராக ஒரு தரமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.
அதன்படி கிளஸ்டர் வெடிகுண்டு போன்ற குண்டுகளை வெடிக்க செய்து உக்ரைன் வான வேடிக்கை காட்டியது.
இதில் ரஷ்யாவை சேர்ந்த வீரர்களின் உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
??The attack at Donbass ??, looks like a flaming bomb.????
— Eng yanyong (@EngYanyong) July 21, 2022
#RussiaUkraine #Russia #StopPutinNow #Ukraine #UkraineRussia #StopWarInUkraine #StopRussia pic.twitter.com/zlaU4BeRAB