நடுக்கடலில் கவிழ்ந்த படகு... 30 புலம்பெயர்ந்தோருக்கு நேர்ந்த துயரம்
47 புலம்பெயர்வோருடன் பயணித்த படகு ஒன்று நடுக்கடலில் கவிழ்ந்ததால், அந்தப் படகில் பயணித்த 30 பேர் பரிதாபமாக பலியாகிய துயர சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
எங்கு நடந்தது இந்த துயர சம்பவம்?
லிபியாவிலிருந்து 47 புலம்பெயர்வோருடன் புறப்பட்ட படகு ஒன்று மத்தியதரைக்கடலில் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறது.
Benghazi என்ற இடத்துக்கு 110 மைல் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்தபோது, மோசமான வானிலை காரணமாக அந்தப் படகு கவிழ்ந்துள்ளது.
Image: @seawatch_intl/Twitter
Alarm Phone என்னும் தொண்டு நிறுவனத்துக்கு இந்த தகவல் கிடைக்கவே, அவர்கள் இந்த தகவலை அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார்கள்.
உடனே, அப்பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த FROLAND என்னும் அந்தக் கப்பல் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது. என்றாலும், தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 17 பேரைத்தான் அவர்களால் உயிருடன் மீட்க முடிந்துள்ளது. 30 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகிவிட்டார்கள்.
இந்த செய்தியை Alarm Phone தொண்டு நிறுவனம் நேற்று இரவு 9.00 மணியளவில் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
Image: CARMELO IMBESI/EPA-EFE/REX/Shutterstock

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.