வாக்களிக்காமல் சென்ற மிசோரம் முதலமைச்சர்.., இந்த காரணத்தினால் தான்
இந்திய மாநிலம், மிசோரத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில முதலமைச்சர் ஜோரம்தங்கா வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்காமல் திரும்பிச் சென்றுள்ளார்.
வாக்களிக்க வந்த முதல்வர்
இந்திய மாநிலம், மிசோரத்தில் 40 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதனால், பொதுமக்கள் அனைவரும் காலையில் இருந்தே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து செல்கின்றனர்.
இந்நிலையில், ஐசால் வடக்கு-II தொகுதிக்குட்பட்ட 19-ஐசால் வெங்லாய்-I ஒய்.எம்.எம். ஹாலில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் வாக்குச்சாவடிக்கு, மிசோரத்தின் முதலமைச்சர் ஜோரம்தங்கா காலையில் வாக்களிக்க வந்தார்.
திரும்பிய முதல்வர்
அப்போது, அங்குள்ள வாக்குச்சாவடியில் உள்ள வாக்கு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனை, விரைவில் சரிசெய்துவிடுவோம் என அங்கிருந்த அதிகாரிகள் கூறினர்.
மேலும், சிறிது நேரம் காத்திற்கும் படியும் முதலமைச்சரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, ஜோரம்தங்கா காத்திருந்தார்.
ஆனாலும், அதிகாரிகளால் உடனடியாக இயந்திரத்தை சரிசெய்ய முடியாததால் முதலமைச்சர் ஜோரம்தங்கா அங்கிருந்து புறப்பட்டு சென்றார். மேலும், அவர் பின்னர் வந்து வாக்களிப்பதாக தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |