பிரேசிலை காப்பாற்ற வந்த சீன தடுப்பூசி! ஆய்வில் வெளியான ஆச்சரியமான தகவல்
ovid-19 #China பிரேசிலில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு வெவ்வேறு உருமாறிய கொரோனவைரஸ்களுக்கு எதிராக சீனாவின் கொரோனாவாக் தடுப்பூசி சிறந்த செயலதிறனை கொண்டுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது அமெரிக்காவை விட தினசரி கொரோனா இறப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் நாடாக பிரேசில் மாறியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 2286 பேர் அந்நாட்டில் கொரோனாவால் இறந்துள்ளனர்.
அந்நாட்டில் இதுவரை 11.2 மில்லியன் மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 270,000 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
கொரோனாவால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த உலகின் பல நாடுகளில் தற்போது தொற்று மற்றும் இறப்பு எண்னிக்கை பல மடங்கு குறைந்துள்ள நிலையில், பிரேசிலில் கடந்த சில மாதங்களாகவே தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதற்கு காரணம் அந்நாட்டில் Aamzonas பகுதியில் கதறியப்பட்ட P.1 மற்றும் Rio de Janerio-வில் கண்டறியப்பட்ட P .2 ஆகிய இரண்டு உருமாறிய கொரோனா வைரஸ்கள் என்று கூறப்படுகிறது.
இந்த வகை வைரஸ்கள் அந்நாட்டில் மிகக் கடுமையாக பரவிவருகிறது. அவை பிரித்தானியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ்களை விட அதிகம் பாதிக்கக்கூடியதாகவும் கொள்ளக்கூடியதாகவும் நிபுணர்களால் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், Instituto Butantan Biological Research Centre சீனாவில் தயாரிக்கப்படும் Coronavac தடுப்புமருந்தைக் கொண்டு ஆய்வு நடத்தியதில், இந்த இரண்டு வகை கொரோனா வைரஸ்களுக்கு எதிராகவும் சிறப்பான செயல்திறனை இந்தத் தடுப்பூசி வெளிப்படுத்தியுள்ளதாக கண்டுபிடித்துள்ளது.
இதன் தொடக்க ஆய்வின் முடிவிலேயே, இந்த தடுப்பூசி P.1 மற்றும் P.2 வகை கொரோனா வைரஸ் தொற்றுவதை தடுக்கிறது என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.