வயல்வெளிக்கு நடுவில் பாலம் அமைத்த அரசு.., ஏன் என்று குழப்பமடைந்த மக்கள்
சாலையே இல்லாத வயல்வெளிக்கு நடுவில் பீகார் அரசு பாலம் அமைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலம் அமைத்த அரசு
இந்திய மாநிலமான பீகார், அராரியா மாவட்டத்தில் சாலையே இல்லாத இடமான வயல் வெளியில் அரசு பாலம் கட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது ரூ.3 கோடி மதிப்பில் சாலை மற்றும் பாலம் அமைப்பதற்கு திட்டம் செய்துள்ளனர். ஆனால், தனியார் நிலம் என்பதால் பாலம் கட்டுவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதே நேரம் அந்த இடத்தில் சாலை அமைக்கப்பட்ட பிறகு வயலின் ஒரு புறத்தில் இருந்து மறுபுறம் தண்ணீர் செல்வதற்கு பாதை வேண்டும் என்பதால் சாலை அமைக்கும் முன்பே பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தெரியாத கிராம மக்கள் அனைவரும் வயலுக்கு நடுவில் ஏன் பாலம் கட்டப்பட்டுள்ளது என்று குழப்பம் அடைந்துள்ளனர்.
இதற்கு முன்னதாக பீகார் மாநிலத்தில் 10 -க்கும் மேற்பட்ட பாலங்கள் ஒன்றன்பின் ஒன்றாக இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |