ஈபிள் கோபுரத்தில் முன்கூட்டியே அணைக்கப்பட்ட விளக்குகள்: காரணம் இதுதான்...
பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத் மறைவையொட்டி உலக நாடுகள் பல அவருக்கு தங்கள் அஞ்சலியை செலுத்தி வருகின்றன.
பாரீஸிலுள்ள ஈபிள் கோபுரத்தின் விளக்குகளும் மகாராணியாருக்கு இரங்கலைத் தெரிவிக்கும் வகையில் அணைக்கப்பட்டன.
பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத் மறைவையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன.
பிரித்தானிய மகாராணியான இரண்டாம் எலிசபெத், தனது 96ஆவது வயதில், நேற்று இயற்கை எய்தினார்.
iamge - aa.com
அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாரீஸிலுள்ள புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் நேற்று முன்கூட்டியே அணைக்கப்பட்டன.
மகாராணியாருக்கு ஆழ்ந்த மனக்கவலையை ஏற்படுத்திய இளவரசி டயானாவின் மரணம் பாரீஸில்தான் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், பிரான்ஸ் மக்களும் பிரித்தானிய மகாராணியாருக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில், சமூக ஊடகங்களில் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.