21ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம்! எந்த நாட்டவர்கள் தெளிவாக காணலாம்?
21ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் நிகழப்போகிறது.
6 மணி நேரம் வரை நீடிக்கும் இந்த சந்திர கிரகணம் நவம்பர் 19ஆம் தேதியன்று இந்திய நேரம் பகல் 12: 48 மணிக்குத் தொடங்கி 16:17 மணிக்கு முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வரவிருக்கும் சந்திர கிரகணம் வட அமெரிக்க நாடுகளான - அமெரிக்கக் கனடா மற்றும் மெக்சிகோவில் உள்ளவர்களுக்கு முழுமையாகத் தெரியும்.
அமெரிக்க நேரப்படி அதிகாலை 2:19 முதல் 5:47 வரை சுமார் 3 மணி நேரம் 28 நிமிடங்கள் இந்த சந்திர கிரகணம் நிகழ்கிறது.
ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வசிப்போருக்கும் இந்த சந்திர கிரகணம் தெரியாது.
சுமார் 600 ஆண்டுகளில் இது போன்ற நீண்ட கிரகணம் வந்ததில்லை என்றும் இது இந்த நூற்றாண்டின் அரிய நிகழ்வு இதுவே என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வை நாசா உள்ளிட்ட பலரும் நேரடியாக ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.