300 சதவிகிதம் அதிகரித்துள்ள புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை: ஐரோப்பிய நாடொன்றில் கலவரம்
அயர்லாந்து நாட்டில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 300 சதவிகிதம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, மக்கள் புலம்பெயர்தலுக்கு எதிராக திரும்பத் துவங்கியுள்ளார்கள்.
நாட்டில் பேரணிகளில் வன்முறை, அதைத் தடுக்கக் குவிக்கப்படும் பொலிசார் என, கலவரம் வெடிக்கும் அபாயம் உருவாகிவருகிறது.
300 சதவிகிதம் அதிகரித்துள்ள புலம்பெயர்ந்தோர்
அயர்லாந்தில், புகலிடம் மற்றும் அகதிநிலை கோரி ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் முதலான நாடுகளிலிருந்து வந்துள்ளவர்கள் எண்ணிக்கை சுமார் 33,000.
உக்ரைன் அகதிகள் எண்ணிக்கை, 100,000.
ஆக, 2023, 24 காலகட்டத்தில் அயர்லாந்துக்கு புலம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 150,000.
ஒவ்வொருவருக்கும் நாளொன்றிற்கு ஆகும் செலவு 70 பவுண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது.
கலவரம் வெடிக்கும் அபாயம்
ஆக, புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை தங்கள் நாட்டில் அதிகரித்து வருவதால், மக்கள் புலம்பெயர்தலுக்கு எதிராக திரும்பத் துவங்கியுள்ளார்கள்.
தலைநகர் டப்ளினில் புலம்பெயர்தல் எதிர்ப்பு பேரணிகள் வன்முறையில் முடிந்துள்ளன.
பெட்ரோல் குண்டு வீச்சு, வாகனங்களுக்கு தீவைப்பு முதலான வன்முறை சம்பவங்களுடன், புகலிடக்கோரிக்கையாளர்களை தங்கவைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பெயிண்ட் தொழிற்சாலை ஒன்றிற்கு தீவைக்கப்பட்டுள்ளது.
Coolock என்னுமிடத்தில், பேரணியில் கலந்துகொண்டவர்கள் பொலிசாருடன் மோத, கலவரம் வெடித்துள்ளது.
மொத்தத்தில், புலம்பெயர்தல் எதிர்ப்பு காரணமாக, அயர்லாந்தில் அமைதியின்மை உருவாகியுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |