மகளின் சடலத்துடன் இருந்த பெற்றோர்! துர்நாற்றத்தால் கிடைத்த அதிர்ச்சி
தமிழகத்தில், 2 நாள்களாக இறந்து போன தனது மகளின் சடலத்துடன் இருந்த பெற்றோரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சடலத்துடன் இருந்த பெற்றோர்
இந்திய மாநிலம் தமிழகத்தில் உள்ள திண்டுக்கல் மாவட்ட பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் சேகர். இவர் நெசவுத்தொழிலாளியாக இருக்கிறார். இவருக்கு ஹரிப்பிரியா என்ற 24 வயது மகள் உள்ளார். இவர், அரசு வேலைக்காக படித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, 2 நாள்களுக்கு முன்பு சேகரின் பக்கத்தில் வீடுகளில் வசிப்பவர்களுக்கு ஏதோ துர்நாற்றம் வீசுவதாக தெரிந்துள்ளது.
பின்பு, சேகரின் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது ஹரிபிரியா தற்கொலை செய்து கொண்டு இறந்த சம்பவம் அம்பலமாகியுள்ளது.
பின்னர், இச்சம்பவத்தை அறிந்த பொலிசார் ஹரிபிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
என்ன காரணம்
இந்நிலையில், ஹரிபிரியா தந்தையான சேகரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஹரிபிரியாவிற்கு தாங்கள் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தோம்.
ஆனால், ஹரிபிரியா அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால், கடந்த 28 ஆம் திகதி தான் படிக்க வேண்டும் என்று கூறி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். நாங்கள் என் மகளின் உடலை பார்த்தபடியே இருந்தோம் என சேகர் கூறியுள்ளார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |