நிலை தடுமாறி சாலையில் விழுந்த நபர்! நொடிப்பொழுதில் தப்பித்த அதிசயம்! வைரலாகும் வீடியோ!
மலேசியாவில் நிகழ்ந்த விபத்து தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.
குறித்த வீடியோவில் கொட்டும் மழையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் ஒருவர் நிலை தடுமாறிய சாலையில் விழுந்துவிட்டார்.
அந்தச் சமயத்தில் யாரும் எதிர்பாராவிதமாக லாரி ஒன்று கீழே விழுந்த வாகன ஓட்டியை நோக்கி வந்ததுள்ளது.
உடனடியாக சுதாரித்துக்கொண்ட அந்த வாகன ஓட்டி லாரி தன் மீது மோதுவதற்குள் சாலையின் ஓரத்திற்கு வந்துவிட்டார்.
இந்தக் காட்சிகள் பார்ப்போரை பதைபதைக்க செய்துள்ளது.
இந்த வீடியோவை சாலையின் ஓரமாக காரில் அமர்ந்திருக்கும் நபர் ஒருவர் பதிவு சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவானது தற்போது வெளியாகி வைரலாகி பரவி வருகின்றது.
பலரும் அந்த வீடியோவை பார்த்து விட்டு மரணத்தின் வாசலை தொட்டுவிட்டு மீண்டும் வந்திருக்கும் அந்த நபருக்கு பலரும் தங்களது வாழ்த்தையும், அறிவுரையையும் கூறிவருகின்றனர்.