மலை முகட்டில் மோதி இரண்டாக உடைந்த ரஷ்ய விமானம்! உடல்கள் கண்டெடுப்பு- முழு விபரங்கள் வெளியானது
ரஷ்யாவில் விமானம் ஒன்று மலை முகட்டில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியானவர்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவில், 22 பயணிகள் ஆறு விமான ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்த அந்த விமானம், பலானா என்ற கிராமத்தில் இறங்க முயலும்போது, கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
மீட்புக் குழுவினர் அந்த விமானத்தை தேடிச்சென்ற நிலையில், மலை முகடு ஒன்றிலும், அதற்கு கீழ் இருந்த கடலிலும் விமானத்தின் பாகங்கள் கிடைப்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
மேகமூட்டம் காரணமாக கீழிறங்கிக்கொண்டிருந்த அந்த விமானத்தின் அடிப்பகுதி மலை முகட்டில் மோதியதில் விமானம் இரண்டாக உடைய, பாதி கடலுக்குள்ளும் மீதி அந்த மலை முகட்டிலும் விழுந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இந்நிலையில், சம்பவ இடத்திலிருந்து 19 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
அதைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள், பெயர்கள் முதலான விவரங்கள் வெளியாகியுள்ளன.
அந்த விமானத்தில் பலானா கிராமத்தின் மூத்த அலுவலர்கள் பலர் பயணித்ததாக கூறப்படும் நிலையில், மேயரான Olga Mokhireva (42) மற்றும் இராணுவம் தொடர்பான துறை ஒன்றில் தலைவராக இருக்கும் Alexander Andreikin, அவரது மனைவியும் நிதித்துறை தலைவருமான Olga Andreikina ஆகியோர் அந்த விமானத்தில் இருந்தது தெரியவந்துள்ளது.
விமானத்தில் பைலட் Dmitry Nikiforov என்றும் அவரது சக பைலட் Alexander Anisimov (27) என்றும் தெரியவந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.