ஓடுபாதையிலிருந்து விலகி தாறுமாறாக ஓடி ஸ்கிட் அடித்த விமானம்! கமெராவில் சிக்கிய திகிலூட்டும் காட்சி
இந்தோனேசியாவில் சரக்கு விமானம் ஒன்று தரையிறங்கும் போது விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது.
ஜகார்த்தா மாகாணத்தில் உள்ள ஹலீம் பெர்தானகுசுமா விமான நிலையத்திலே இந்த விபத்து நடந்துள்ளது.
டிரிகானா ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான 737 சரக்கு விமானம் ஹலீம் பெர்தானகுசுமா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையிலிருந்து விலகி தாறுமாறாக ஓடி ஸ்கிட் அடித்த விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான விமானத்தில் தீ ஏற்பட்டதால் சம்பவயிடத்திற்கு தீயணைப்பு வாகனத்துடன் விரைந்த வீரர்கள் அதை அணைத்தனர்.
இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், விமானம் சேதடைந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. +
ஓடுபாதையின் அருகே விபத்துக்குள்ளாகி கிடக்கும் விமானத்தை அகற்றும் பணி நடைபெற்று வருவதால் ஹலீம் பெர்தானகுசுமா விமான நிலையத்தில் விமானச் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
— Breaking Aviation News & Videos (@breakingavnews) March 20, 2021