ஒரே ஒரு தக்காளியின் விலை 17 ரூபாய்! இணையத்தில் வைரலாகும் பில்
ஒரே ஒரு தக்காளி ரூ.17க்கு விற்கப்பட்டிருப்பதற்கான பில்லை இணையவாசிகள் விமர்சித்து வைரலாக்கி வருகின்றனர்.
தக்காளி விலை உயர்வு
நாடு முழுவதும் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகிறது. தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், பாமர மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தக்காளியா, தங்கமா என்று கேட்கக் கூடிய அளவுக்கு வந்துவிட்டது என்றும் சிலர் கூறுகின்றனர். சில திருமணங்களில் பரிசாக தக்காளியை கொடுக்கும் பழக்கமும் வந்துள்ளது.
உத்திர பிரதேசத்தில் காய்கறிக்கடை வியாபாரி ஒருவர் ஒருபடி மேலே சென்று தக்காளியின் பாதுகாப்பிற்காக பவுன்சர்களை நியமித்திருந்தார். அதுமட்டுமில்லாமல், ஹோட்டல்களிலும் தக்காளி இல்லாமல் சமைத்து வருகின்றனர்.
ஒரு தக்காளி விலை ரூ.17
இந்நிலையில் ஒரே ஒரு தக்காளி 17 ரூபாய்க்கு விற்கப்பட்ட பில்லானது தற்போது வைரலாகி வருகிறது. இந்திய மாநிலம் கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள காய்கறிச்சந்தையில் தான் ஒரு தக்காளியை 17 ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
அங்கு, காய்கறிச்சந்தைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் வியாபாரியிடம் தக்காளி விலை என்னவென்று கேட்டுள்ளார். அந்த இடத்தில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ. 140க்கு விற்கப்படுகிறது. அப்போது, அவர் வாங்கிய ஒரே ஒரு தக்காளி கிராம் அடிப்படையில் ரூ.16.80 ஆகும்.
பின்னர், அவர் அந்த ஒரே ஒரு தக்காளியை ரூ.17க்கு வாங்கி, அதற்கான பில்லையும் வாங்கியுள்ளார். அந்த பில்லை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்ததையடுத்து, தற்போது வைரலாகி வருகிறது. இணையவாசிகள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |