மியான்மரில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது ஏதற்காக? இராணுவத்தின் உண்மையான நோக்கம் என்ன? பிரிகேடியர் ஜெனரல் விளக்கம்
மியான்மரில் ஆளும் கட்சித்தலைவர்களை கைது செய்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது ஏன் என்பது குறித்தும், அவர்களின் நோக்கம் குறித்தும் அந்நாட்டு இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் Zaw Min Tun விளக்கமளித்துள்ளார்.
மியான்மரின் இராணுவத்திற்கு நாட்டில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை.
இது ஒரு ஆட்சி கவிழ்ப்பு சதி அல்ல என்று வலியுறுத்திய ஜெனரல் Zaw Min Tun, நவம்பரில் நடந்த தேர்தல் மோசடி இராணுவத்தின் உத்தரவின் பேரில் தீர்க்கப்படவில்லை, அதற்காக அரசாங்க தலைவர்களை தடுத்து வைத்திருப்பது நியாயமானது என கூறினார்.
தேர்தலை நடத்துவதும், வென்ற கட்சிக்கு அதிகாரத்தை வழங்குவதும் தான் எங்கள் நோக்கம் என்று பிரிகேடியர் ஜெனரல் Zaw Min Tun செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
மேலும், 2008 அரசியலமைப்பு சட்டத்தை நாடு ஏற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது என்று வலியுறுத்தினார்.
தசாப்தத்திற்கு முன்னர் நடைமுறைக்கு வந்து 2015-ல் திருத்தப்பட்ட இந்த சட்டம், பாராளுமன்றத்தில் சுமார் கால்வாசி இடங்களை இராணுவ அதிகாரிகளுக்கு சேவை செய்வதற்காக ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.