வடகொரியாவில் கொரோனா வைரஸே இல்லாமல் இருப்பதற்கு இது தான் காரணமா? வியக்க வைக்கும் தகவல்
வடகொரியா தங்கள் கொரோனா வைரஸ் பாதிப்பே இல்லை என்று கூறி வருவது, உலக சுகாதார அமைப்பை வியக்க வைத்துள்ளது.
கொரிய தீபகற்பத்தில் இருக்கும் தீவிரமான கம்யூனிஸ்ட் நாடு என்று அழைக்கப்படும், சர்வாதிகார ஆட்சி செய்யும் தேசம் வடகொரியா.
இதில் வடபகுதி எல்லையை சீனாவுடனும், ரஷ்யாவுடனும், தென்பகுதி எல்லையைத் தென் கொரியாவுடனும் வடகொரியா பகிர்ந்து கொண்டுள்ளது.
இந்நிலையில், கொரோனாவால் உலகில் இருக்கும் பெரும்பாலான நாடுகள் பாதித்துவிட்டன. ஆனால் வடகொரியாவோ தங்கள் நாட்டில் கொரோனா பாதிப்போ, மரணமோ ஏற்படவில்லை என்று கூறி வருகிறது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் வடகொரியாவுக்கான பிரதிநிதி எட்வின் சால்வடார், செய்தி நிறுவனம் ஒன்றிற்கு வடகொரியா நிலை குறித்து மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
அதில் அவர், கடந்த ஆண்டு ஏப்ரல் 11-ஆம் திகதி வடகொரியாவில் கொரோனாவால் 23,121 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி அரசு குணப்படுத்தியது.
கடந்த மார்ச் 26-ஆம் திகதி முதல் ஏப்ரல் 1-ஆம் திகதி வரை 732 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், எந்த முடிவுகளையும் உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா வழங்க மறுக்கிறது.
எத்தனை பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள், அறிகுறிகளுடன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைக் கூற வடகொரியா அரசு மறுக்கிறது. உண்மையில் கொரோனாவால் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா அல்லது கொரோனா இல்லாத நாடா என்பது வியப்பாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.