வெளிநாட்டவர்களின் கவனத்தை ஈர்த்த இலங்கையர்! மெய்சிலிர்க்க வைக்கும் சிற்பங்கள்
பனிச்சிற்பங்கள் உருவாக்குபவரான இலங்கையர் ஒருவர், மறைந்த பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தை கௌரவிக்கும் வகையில், அவரது உருவத்தை பனிச்சிற்பமாக உருவாக்கியுள்ளார்.
பனிச்சிற்பங்கள் உருவாக்கும் இலங்கையர்
துபாய், பஹ்ரைன் மற்றும் எகிப்து நாடுகளில் வலம் வரும் இலங்கையரான மார்க் (Mark Ranasinghe), பனிச்சிற்பங்கள் உருவாக்குவதில் கைதேர்ந்தவர். முன்பு விருந்தோம்பல் துறையில் பணியாற்றிய மார்க், தற்போது Impulse Creations என்னும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
சுமார் 10 ஆண்டுகளாக பனிச்சிற்பங்களை உருவாக்கிவரும் மார்க், ஜேர்மனி, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் தனது படைப்புகளுக்காக விருதுகளை வென்றுள்ளார்.
மகாராணியாரை கௌரவிக்கும் வகையில் செய்த விடயம்
இந்நிலையில், மறைந்த பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தை கௌரவிக்கும் வகையில், அவரது உருவத்தை பனிச்சிற்பமாக உருவாக்கியுள்ளார் மார்க்.
உலகின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மகாராணியாரை கௌரவிக்கும் வகையில் அவரது உருவத்தை செதுக்குவதை அவருக்கு செலுத்தும் நன்றிக்கடனாக கருதுகிறேன் என்கிறார் மார்க்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |