திடீரென பிரிந்த தம்பியின் உயிர்! தம்பியின் மார் மேலே உயிரை விட்ட அக்கா
தமிழகத்தின் கன்னியாகுமாரி மாவட்டத்தில் பள்ளி ஆசிரியாராக இருந்த நபர் மாரடைப்பில் இறந்ததால் அவரின் மேலே அவரது அக்காவும் துக்கம் தாளாமல் உயிர் விட்ட சோக சம்பவம் நடந்துள்ளது.
கன்னியாகுமாரியில் தக்களை அருகே காந்தி நகர் பகுதியை சேர்ந்த பள்ளியில் ஆசிரியாக பணிபுரிந்தவர் வேணுகோபால்.
இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்த வேணுகோபால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார், ஒருநாள் திடீரென மாரடைப்பு ஏற்பட மயக்கம் ஏற்பட்டு உயிர் பிரிந்தது.
இதனை கேள்வியுற்ற தேரூர் பகுதியிலிருந்து வந்த அவரின் அக்கா, அவரை காண வந்து, தம்பியின் சடலத்தை பார்த்து தேம்பி தேம்பி அழுதுள்ளார்.
திடீரென இறந்த தம்பியின் மார்பில் மயங்கி விழவே, உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை தூக்கியுள்ளனர்.
அப்போது தான் தம்பியின் மார்பில் சாய்ந்தபடி அக்காவும் உயிரிழந்தது தெரியவந்தது, இச்சம்பவம் அக்குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது.