ஆபத்தின் பிடியில் சிக்கிய நாடு! இராணுவ கிடங்கில் அதிபயங்கர ஆயுதங்களை அள்ளும் தாலீபான்கள்: வெளியான வீடியோ
ஆப்கானிஸ்தானின் பல பகுதிகள் தாலீபான்கள் கட்டுப்பாட்டு பகுதிகள் வந்துவிட்ட நிலையில், இராணுவ ஆயுதக் கிடங்கில் இருந்து தாலீபான்கள் துப்பாக்கிளை அள்ளிச் செல்லும் வீடியோ காட்சி இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க படைகள் வாபஸ் பெற்று திரும்பிவிட்ட நிலையில், அங்கிருக்கும் தாலீபான்கள் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன.
இதனால் அரசு மற்றும் தாலீபன்களுக்கிடையே உள்நாட்டு போர் தீவிரமாகி வருகிறது. இந்த போர் காரணமாக ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளை தாலீபான்கள் கைப்பற்றிவிட்ட நிலையில், தங்களிடம் சரணடையும் இராணுவ வீரர்களை, காவல்துறையினரை ஈவு இரக்கமின்றி கொலை செய்து வருகின்றனர்.
The Taliban looting an Afghan Army Armory. This is the real thing now
— Pradeep Aggarwal (Veteran - Col) (@Pradeep54242413) August 12, 2021
Afghanistan headed into a serious situation of instability!#afghanistanunderattack #AfghanistanBurning pic.twitter.com/BfEYLScBJ5
மேலும், நகரின் முக்கிய பகுதிகளை கைப்பற்றி வரும் தாலீபான்கள் அங்கிருக்கும் பெண்களை கட்டாயப்படுத்தி, பாலியல் துன்புறுத்தல், திருமணத்திற்கு நிர்பந்திப்பது போன்ற கொடூர செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது அங்கிருக்கும் இராணுவ ஆயுதகிடங்கை கைப்பற்றியுள்ள தாலீபான்கள், அந்த இராணுவ கிடங்கில் இருக்கும் துப்பாக்கிகளை அள்ளி வாகனம் ஒன்றில் வைத்து கொண்டு செல்லும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் #AfghanistanBurning(பற்றி எரியும் ஆப்கானிஸ்தான்) என்ற ஹேஷ்டெக் டிரண்ட் ஆகி வருகிறது.