கலர் கலராக வளையல் போட்ட மனைவி.., கொடூரமாக தாக்கிய கணவர் மற்றும் மாமியார்
மும்பையில், கலர் கலராக வளையல் போடும் மனைவியை கண்மூடித்தனமாக கணவரின் குடும்பம் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வளையல் அணிந்ததற்கு எதிர்ப்பு
இந்திய மாநிலம் மஹாராஷ்டிராவில் உள்ள புனே நகரத்தைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் பொலிஸில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர், "எனது கணவர் பிரதீப் ஆர்கடே (30) நான் மாடர்னாக வளையல் அணிந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து தகராறு செய்துவந்த நிலையில், நவம்பர் 13 -ம் தேதியன்று வாக்குவாதம் முற்றியது. இதில் என்னுடைய 50 வயது மாமியார் தலைமுடியைப் பிடித்து அறைந்தார். எனது கணவர் பெல்ட்டை வைத்து அடித்தார். என் கணவரின் உறவினர் பெண் ஒருவரும் தரையில் தள்ளி விட்டார்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
வழக்குப்பதிவு
இந்த புகாரின் படி, பெண்ணின் கணவர், மாமியார் மற்றும் உறவினர் பெண் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ததாக பொலிஸார் ஒருவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். பின்னர், இந்த வழக்கு விசாரணைக்காக நவி மும்பைக்கு மாற்றப்பட்டது.
இதில் பெண்ணை தாக்கியவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவுகள் 323 (தானாக முன்வந்து காயப்படுத்துதல்), 324 (அபாயகரமான ஆயுதங்கள் அல்லது வழிமுறைகளால் தானாக முன்வந்து காயப்படுத்துதல்), 34 (பொது நோக்கம்), 504 (உட்போர்த்தனமான அவமதிப்பு) ஆகியவற்றின் கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |