அவள் தந்தை, சகோதரை கொன்றார்கள்... மணிப்பூரில் நிர்வாண ஊர்வலம் நடத்தப்பட்ட பெண்ணின் தாயார் கண்ணீர்
இந்திய மாகாணம் மணிப்பூரில் நிர்வாண ஊர்வலம் நடத்தப்பட்ட இரு பெண்களில் ஒருவரது தாயார் கண்ணீருடன் கூறிய தகவல், அங்குள்ள கொடூர சூழலை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது.
எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை
மணிப்பூரில் அரசாங்கம் தலையிட்டு, அமைதி திரும்பினாலும், மீண்டும் அந்த கிராமத்திற்கு செல்வது என்பது முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த தாயார் தெரிவித்துள்ளார்.
@indiatoday
ஆழ்ந்த மன உளைச்சலில் இருக்கும் அந்த தாயார், சில நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து பேச முடியாமல் தத்தளித்துள்ளார். மணிப்பூர் அரசாங்கமும் மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசாங்கமும் மக்களை பாதுகாக்கவோ, கலவரத்தை கட்டுப்படுத்தவோ போதுமான எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை என்றே அந்த தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமது மகளை அந்த வன்முறை குழு கூட்டு சீரழிப்புக்கு உட்படுத்தும் முன்னர், தமது கணவரையும் மகனையும் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மே 4ம் திகதி நடந்த இச்சம்பவத்தில், இதுவரை நால்வர் கைதாகியுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. தமது மொத்த நம்பிக்கையுமான இளைய மகனை பறிகொடுத்துவிட்டேன் என கதறும் அந்த தாயார், தற்போது கணவரும் இல்லை, மூத்த மகனுக்கு வேலை இல்லை, எதிர்காலத்தை நினைத்தால், எனக்கு பைத்தியம் பிடித்துவிடும் நிலையில் இருக்கிறேன் என்றார்.
வேடிக்கை மட்டும் பார்த்த அரசாங்கம்
இன மோதல்களுக்கு இதுவரை 120 பேர்கள் பலியானதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால், உண்மையான எண்ணிக்கை மிக அதிகம் என்றே கூறப்படுகிறது. இனி கிராமத்திற்கு திரும்புவது முடியாத ஒன்று என குறிப்பிட்டுள்ள அவர், எங்கள் குடியிருப்புகளை கொளுத்தியுள்ளனர், விளை நிலங்களை சேதப்படுத்தியுள்ளனர்.
@npg
மொத்த கிராமமும் தீக்கிரையாகியுள்ளது. என்ன எஞ்சியிருக்கிறது என்பதால் நாங்கள் இனி கிராமத்திற்கு திரும்ப வேண்டும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மே 3ம் திகதியில் இருந்து கலவரம் தீவிரமடைந்து வருகிறது, ஆனால் அரசாங்கம் வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தது.
நாட்டின் பிரதமர் மணிப்பூர் பற்றி வாய் திறக்கவே 80 நாட்களானது. பெண்களை அந்த வன்முறை குழுவினருக்கு ஒப்படைத்ததே காவல்துறை அதிகாரிகள் தான், இவர்களை நம்பி இரவு நிம்மதியாக தூங்க முடியுமா என அவர் கண்ணீர் சிந்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |