இறந்த கொசுக்களால் சிக்கிய கொள்ளையன்! சுவாரசிய சம்பவம்
சீனாவில் விலையுயர்ந்த பொருட்களை திருடிச் சென்ற கொள்ளையன் கொசுக்களினால் சிக்கிய சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.
சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள புஜோ என்ற இடத்தில், பூட்டிக் கிடந்த வீட்டில் விலையுயர்ந்த பொருட்கள் கொள்ளை போயிருந்தன.
இதுகுறித்து புகார் எழுந்த நிலையில் பொலிசார் குறித்த வீட்டை சோதனையிட்டனர். கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்ததால், கொள்ளையன் பால்கனி வழியாக தான் கொள்ளையன் நுழைந்திருக்க வேண்டும் என பொலிசார் கணித்தனர்.
அதனைத் தொடர்ந்து அவ்வழியாகவே பொலிசாரும் சென்று பார்த்தபோது, கொள்ளையடிக்க வந்த நபர் சமையலறையில் நூடுல்ஸ், முட்டை ஆகியவற்றை சமைத்து சாப்பிட்டுவிட்டு சென்றது தெரிய வந்தது.
அதன் பின்னர் வீட்டை சோதனையிட்ட பொலிசார் சுவரில் இறந்த கொசுக்களை கண்டனர். அத்துடன் சுவரில் படர்ந்திருந்த ரத்தக்கறையை சேகரித்த பொலிசார், அதனை டி.என்.ஏ சோதனைக்கு உட்படுத்தினர். சுவரில் புதிதாக வர்ணம் பூசப்பட்டிருந்ததால் அதிலிருந்த ரத்தம் குற்றவாளியுடையதாக இருக்கலாம் என அவர்கள் சந்தேகித்தனர்.
indianexpress
பின்னர், அந்த ரத்த மாதிரிகளை ஏற்கனவே குற்றச் செயலில் ஈடுப்பட்டவர்களின் ரத்த மாதிரியுடன் ஒப்பிட்டபோது சாய் என்ற நபருடன் அது ஒத்துபோனது. கொள்ளை நடந்த 19 நாட்களுக்கு பிறகு கொள்ளையன் பொலிசாரால் கைது செய்யப்பட்டான்.
இந்த டி.என்.ஏ சோதனை மூலம் குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டதால், ஒரே நபருடன் தொடர்புடைய மூன்று திருட்டு வழக்குகளையும் பொலிசாரால் தீர்க்க முடிந்ததாக கூறப்படுகிறது.
tribuneindia
இதுகுறித்து இணையதளவாசிகள் கூறும்போது, கொள்ளையன் கொசுக்களை கொன்றதால் அவை இறந்த பின்னர் பொலிசாரிடம் மாட்டிவிட்டு பழி வாங்கிவிட்டன. இது ஒரு சிறந்த பழிவாங்கல் நடவடிக்கை என கிண்டலாக பதிவிட்டுள்ளனர்.