தண்ணீருக்குள் தாமரைத் தண்டு மூலம் சுவாசித்துக்கொண்டிருந்த திருடன்: ஒரு சுவாரஸ்ய தகவல்
ரயிலில் முறைப்படி டிக்கெட் எடுத்து ஏறி, பயணிகள் தூங்கியதும் அவர்களிடமிருந்து விலையுயர்ந்த பொருட்களை திருடுவதை வழக்கமாகக் கொண்ட ஒரு நபர் பொலிசாரிடம் சிக்கினார்.
பொலிசாரிடமிருந்து தப்ப குளம் ஒன்றிற்குள் குதித்த அந்த நபரை சுமார் ஐந்து மணி நேரமாக காணவில்லை!
500 ரயில் திருட்டுக்கள்
திங்கட்கிழமையன்று, மத்தியப்பிரதேசத்திலுள்ள Sihora ரயில் நிலையத்தில், ரயில் ஒன்றிலிருந்து குதித்த ஒருவர் வேகவேகமாக ஓடுவதைக் கண்டு சந்தேகப்பட்ட பொலிசார் அவரைத் துரத்தியுள்ளனர்.

அவர் ரயில் பெண்ணொருவரிடம் பர்ஸைத் திருட முயன்றதாக தகவல் கிடைக்கவே அந்த நபரைப் பிடிப்பதற்காக பொலிசார் அவர் பின்னால் ஓட, அவர் குளம் ஒன்றிற்குள் குதித்துள்ளார்.
தண்ணீருக்குள் குதித்த நபர் மாயமாக, நீச்சல் தெரிந்தவர்கள் குளத்தில் இறங்கி அவரைத் தேடியுள்ளனர்.
சுமார் ஐந்து மணி நேரத்திற்குப் பிறகே அவரைக் கண்டுபிடிக்கமுடிந்துள்ளது. அவர், தாமரைத் தண்டு ஒன்றின் உதவியுடன் தண்ணீருக்குள் சுவாசித்தபடி மறைந்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவர் பெயர் ஹர்விந்தர் சிங் (32) என்பதும், காஷ்மீர் முதல் கேரளா வரை பல இடங்களில் 500க்கும் மேற்பட்ட ரயில் திருட்டுக்களுக்காக தேடப்பட்டுவந்த நபர் என்பதும் தெரியவந்துள்ளது.
அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சென்னை உட்பட பல நகர, மாநில அதிகாரிகள் தங்களைத் தொடர்புகொண்டு வருவதாக உத்தரப்பிரதேச அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |