ஐபிஎல்! உலகில் நம்பர் 1 பவுலர் ஓவரை துவம்சம் செய்த இளம் வீரர்... ரசிகர்கள் ஆச்சரியம்
ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த இளம் வீரர் திலக் வர்மா அசத்தலாக ஆடிய விதம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி புனே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் மும்பை அணி தோற்றது. இருந்த போதிலும் அந்த அணியை சேர்ந்த இளம் வீரர் திலக் வர்மாவின் அதிரடி ஆட்டம் ரசிகர்களை கவர்ந்தது.
முக்கியமாக உலகின் நம்பர் 1 டெஸ்ட் பவுலராகவும், டி20ல் அசுரத்தனமான ஃபார்மிலும் இருக்கும் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் திலக் வாணவேடிக்கை காட்டினார்.
அவர் வீசிய 16வது ஓவரை எதிர்கொண்ட திலக் வர்மா முதல் பந்தையே சிக்ஸருக்கு விளாசி ஆச்சரியம் தந்தார். அடுத்த பந்தில் டாட், சிங்கிள் என எடுத்ததால், பேட் கம்மின்ஸை பார்த்து மிரண்டுவிட்டார் என நினைத்தனர்.
ஆனால் மீண்டும் 4வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். முதல் முறையாக பேட் கம்மின்ஸின் பந்துவீச்சை எதிர்கொண்ட இந்தியாவின் 19வயது திலக் வர்மா, அவர் ஓவரில் 6, 0, 1, 4, 1 என மொத்தமாக 13 ரன்களை குவித்தார்.
இப்போட்டியில் திலக் வர்மா, 27 பந்துகளில் 38 ரன்களை அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.