2,200 கடந்த இறப்பு எண்ணிக்கை... ஆப்கானிஸ்தானை மூன்றாவதும் உலுக்கிய நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,200-ஐ தாண்டிய நிலையில், 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
வியாழக்கிழமை இரவு
ஜேர்மனியில் உள்ள ஹெல்ம்ஹோல்ட்ஸ் புவி அறிவியல் மையத்தின் தகவலின் அடிப்படையில், வியாழக்கிழமை இரவு தென்கிழக்கு பகுதிகளை 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியுள்ளது. சேதங்கள் தொடர்பில் தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
செவ்வாய்க்கிழமை 5.5 ரிக்டர் அளவிலான நில அதிர்வு ஏற்பட்ட நிலையில், மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. பாறைகள் சரிந்ததை அடுத்து அதிகமான சாலைகள் துண்டிக்கப்பட்டதால் மீட்பு முயற்சிகளுக்கு இடையூறு ஏற்பட்டது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,205 ஆக உயர்ந்துள்ளதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை உறுதிப்படுத்தினார்.
பல தசாப்தங்களில் நாட்டைத் தாக்கிய மிகக் கொடிய இயற்கை பேரழிவுகளில் ஒன்றாக இச்சம்பவம் அடையாளப்படுத்தப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நாட்டின் மலைப்பகுதி மற்றும் புறநகர் கிழக்குப் பகுதியை 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியது.
முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட
முழு கிராமங்களையும் தரைமட்டமாக்கிய நிலையில், மக்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். பெரும்பாலான உயிரிழப்புகள் குனார் மாகாணத்தில் பதிவாகியிருந்தன, அங்கு பல வீடுகள் மரம் மற்றும் மண் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளன.
பேரழிவால் முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட கிராமங்களை மீட்புக் குழுவினர் போராடி சென்றடைந்துள்ளனர், மேலும் வியாழக்கிழமையும் இடிபாடுகளில் இருந்து உடல்கள் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.
குனாரில் சுமார் 98% கட்டிடங்கள் சேதமடைந்தன அல்லது அழிக்கப்பட்டன, இதனிடையே, தப்பிப்பிழைத்தவர்களைக் கண்டுபிடித்து மீட்க உதவுவதற்காக தலிபான் அதிகாரிகள் ஹெலிகாப்டர்களை களமிறக்கியுள்ளனர் மற்றும் இராணுவ கமாண்டோக்களை விமானத்தில் இறக்கிவிட்டனர். தொடர்ந்து மூன்று நிலநடுக்கத்தை அடுத்து இதுவரை சுமார் 84,000 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |