வீங்கிய காலுடன் பிரச்சாரம் செய்யும் திருமாவளவன்.., கலங்க வைக்கும் புகைப்படங்கள்
சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் திருமாவளவன் வீங்கிய காலுடன் பிரச்சாரம் செய்து வருகிறார்.
திருமாவளவன் போட்டி
கடந்த 2019 -ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தோல்வியின் விளிம்புக்கு சென்று திருமாவளவன் வெற்றி பெற்றார்.
அதேபோல இந்த ஆண்டும் கடும் சவால்கள் வரக்கூடாது என்பதற்காக வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மற்றும், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேலுமுருகனும் உதவி செய்து வருகிறார். சிதம்பரம் மக்களவை தொகுதி நீண்ட காலமாகவே தனி தொகுதியாகவே இருந்து வருகிறது.
இந்த தொகுதியானது கடலூர் மாவட்டத்தின் புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் சட்டப்பேரவைத் தொகுதிகளுடன், அரியலூர் மாவட்டத்தின் அரியலூர், ஜெயங்கொண்டம் தொகுதிகளையும், பெரம்பலூர் மாவட்டத்தின் குன்னம் தொகுதியும் உள்ளடக்கியது ஆகும்.
இந்த தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் விசிக தலைவர் திருமாவளவன், அதிமுக சார்பில் சந்திரகாசன், பாஜக சார்பில் கார்த்திகாயினி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜான்சிராணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் இரவு பகலாக பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் ஒவ்வொரு கிராமம் கிராமமாக சென்று காரில் எழுந்து நின்றபடியும், உட்கார்ந்த படியும் பிரச்சாரம் செய்து வருகிறார்.
திருமாவளவனின் கால் இரண்டும் வீங்கிய நிலையில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பான புகைப்படத்தை வன்னி அரசு வெளியிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |