சீமானுக்கு திருமாவளவன் கண்டனம்!
செருப்பை தூக்கி காண்பித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயலுக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணாசாலையில் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது, பொதுவாழ்க்கையில் மாறுபட்ட கருத்துக்கள் உண்டு, முரண்பட்ட கருத்துக்கள் நிலவும்.
கட்சி அல்லது இயக்கம் ஆகியவற்றை தலைமை தாங்கி நடத்தக்கூடியவர்கள், கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் செருப்பை தூக்கி பொது நிகழ்வுகளிலே காண்பிப்பதை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது.
பொதுமக்களும் அதை ஏற்கமாட்டார்கள். அத்தகைய போக்கு உள்ளபடியே கவலை அளிக்ககூடியதாக இருக்கிறது, வேதனை அளிக்கக்கூடியதாக இருக்கிறது, கண்டனத்திற்குரியது என திருமாவளம் தெரிவித்தார்.