சிங்கப்பூரில் சீனப் பெண் மேல் தமிழருக்கு மலர்ந்த காதல்: தாலி கட்டி நடந்த திருமணம்
தமிழக மாவட்டம் திருவண்ணாமலையைச் சேர்ந்த நபர் ஒருவர், சீனாவைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
சிங்கப்பூரில் மலர்ந்த காதல்
திருவண்ணாமலை மாவட்ட வந்தவாசியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் சிங்கப்பூரில் பணியாற்றி வந்துள்ளார்.

அங்கு சீனாவின் ஷாங்காயைச் சேர்ந்த வாங் யாயா என்ற பெண்ணை அவர் சந்தித்துள்ளார்.
இருவரும் காதலிக்க தொடங்கிய நிலையில் அங்கேயே பதிவுத் திருமணம் செய்துள்ளனர். பின்னர் சீன முறைப்படி இந்த ஜோடி திருமணம் செய்துள்ளது.
தமிழ்முறைப்படி திருமணம்
இந்த நிலையில், வெங்கடேசன் - வாங் யாயா இருவரும் தமிழ்நாட்டிற்கு வந்த தமிழ்முறைப்படி தாலி கட்டி, சொந்த பந்தங்களின் ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்துள்ளனர்.

மணப்பெண்ணின் விருப்பப்படி சொந்த வீடு கட்டி தமிழ்நாட்டில் திருமணம் செய்ததாக வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவரது மனைவி வாங் யாயாவிற்கு தமிழ் கலாச்சாரத்தின் மீது மரியாதையும், ஆவலும் இருப்பதாக குறிப்பிட்டார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |