“இது மிகவும் நல்ல வங்கி” என்னால் திருட முடியவில்லை..! லெட்டர் எழுதி வைத்த திருடன்
வங்கியை உடைத்து திருட முயன்ற அது முடியாமல் போனதை தொடர்ந்து, “இது ஒரு நல்ல வங்கி என்று திருடன் எழுதி வைத்துவிட்டு சென்ற சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
வங்கியில் கொள்ளை முயற்சி
இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் மஞ்சேரி மாவட்டத்தில் நென்னல் மண்டல் தலைமையகத்தில் உள்ள அரசு நடத்தும் கிராமப்புற வங்கிக் கிளையில் வியாழக்கிழமை அன்று முகமூடி அணிந்த கொள்ளையன் ஒருவன் திருட முயற்சி செய்துள்ளான்.
வங்கியின் மேலாளர், காசாளர், மற்றும் அலுவலக குமாஸ்தாக்களின் அறைகளை உடைத்து திருட முயற்சி செய்த திருடனுக்கு காசோ அல்லது மதிப்புமிக்க பொருட்களோ கிடைக்காத நிலையில் விரக்தி அடைந்துள்ளனர்.
இதனால் வங்கியின் லாக்கரையும் திறந்து பார்க்காமல் அப்படியே சென்றுள்ளான் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு நல்ல வங்கி
இதற்கிடையில் வங்கியில் கொள்ளை அடிக்க முடியாமல் விரக்தியடைந்த திருடன் செய்தி ஒன்றை எழுதி வைத்து விட்டு சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதில், “என்னால் இந்த வங்கியில் இருந்து ஒரு ரூபாய் கூட திருட முடியவில்லை, இங்கு என்னுடைய கைரேகை எதிலும் இருக்காது, எனவே என்னை பிடிக்க முயற்சிக்க வேண்டாம், இது ஒரு நல்ல வங்கி” என்று எழுதி வைத்து இருந்தாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
iStock
அதிகாலையில் வங்கி அதிகாரிகள் திறந்து பார்த்த போது திருட்டு முயற்சி அரங்கேறி இருப்பதை அறிந்து கொண்டு பொலிஸாருக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில் பொலிஸார் ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |