அதிக H-1B விசா பணியாளர்களைக் கொண்டுள்ள நிறுவனம்... வெளியான பட்டியல்
வெளிநாட்டு ஊழியர்களுக்காக H1-B விசாவைப் பெற, அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் இனி அரசாங்கத்திற்கு 100,000 டொலர் கட்டணமாக செலுத்த வேண்டும்.
அதிக எண்ணிக்கை
அமெரிக்க அரசாங்கத்தின் இந்த முடிவு இந்தியாவை சேர்ந்த ஊழியர்களுக்கே பாதிப்பை ஏற்படுத்த இருக்கிறது. இந்த நடவடிக்கையானது அமெரிக்க நிறுவனங்கள் அதிக அமெரிக்க திறமையாளர்களை வேலைக்கு அமர்த்துவதை உறுதி செய்யும்,
அதே வேளையில் குறைந்த திறமையுள்ள வெளிநாட்டு தொழிலாளர்களை அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் என்று அமெரிக்க வர்த்தக செயலாளர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
ஆனால் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் தொழில்நுட்ப நிறுவனங்கள் எவை, தற்போது H1-B விசாக்களைப் பெறுவதற்கு அதிக விலை கொடுக்க அவர்கள் தயாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அமேசான் நிறுவனத்தில்
வெளியான தரவுகளின் அடிப்படையில், அமேசான் நிறுவனத்தில் மட்டுமே 10,044 வெளிநாட்டு ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இரண்டாமிடத்தில் உள்ள Tata Consultancy Services நிறுவனத்தில் 5,505 ஊழியர்கள்,
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 5,189 ஊழியர்கள், மெட்டா நிறுவனத்தில் 5123 ஊழியர்கள், ஆப்பிள் நிறுவனத்தில் 4202 ஊழியர்கள், கூகிள் நிறுவனத்தில் 4181 ஊழியர்கள்,
Cognizant Technology Solution - 2,493, JP Morgan Chase and Co - 2,440, Walmart Associates Inc - 2,390 மற்றும் Deloitte Consulting LLP - 2353 ஊழியர் என டாப் 10 பட்டியல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |