மிக மோசமான பேரழிவு! 70 பேர் பலி.. 11 மாவட்டங்களில் வெள்ளம்
இந்திய மாநிலம் இமாச்சல பிரதேசம் பேரழிவுக்கு என்ன காரணம் என்பதனையும், இப்படி ஒரு இயற்கை சீற்றத்தை எதிர்கொண்டதில்லை எனவும் இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு கூறியுள்ளார்.
70 பேர் உயிரிழப்பு
இயற்கை எழில் மிக்க இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. தொடர் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட மண்சரிவால் இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், பல பேர் காணாமல் போயுள்ளனர். அதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. சிம்லா உள்ளிட்ட 11 மாவட்டங்கள் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்த நிலையில் காணப்படுகின்றன.
வெள்ளம் பாதித்த பகுதியில் சிக்கியவர்களை மீட்டு பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்கின்றனர் . மேலும், விமானப்படை, ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை பாதித்த இடங்களுக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு
இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர்சுக்விந்தர் சிங் சுகு கூறுகையில், "கடந்த 50 வருடங்களில் இப்படி ஒரு இயற்கை சீற்றத்தை எதிர்கொண்டதில்லை. மழையால் பாதித்த பகுதிகளை சரி செய்து பழைய நிலைமைக்கு கொண்டு வர ஒரு ஆண்டாகும்.
வீடு கட்டும் மக்கள் அறிவியல் முறைப்படி வீடு கட்டவில்லை. தற்போது உள்ள வடிகால் அமைப்பு மிகவும் மோசமாக உள்ளது. இன்று இடிந்து வீடுகள் அனைத்தும் பொறியியல் தரத்தில் இல்லை.
பிஹாரி கட்டிடக் கலைஞர்கள் என்று அழைக்கப்படும் புலம்பெயர்ந்த கட்டிட தொழிலாளிகள் தான் வீடுகளை கட்டுகின்றனர். இது தான் இந்த பேரழிவுக்கு காரணம்" என கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |