தொடர்ந்து அண்ணாமலையை தாக்கும் சீமான்.., பின்னணியில் இருக்கும் காரணம் இது தான்
நாம் தமிழர் கட்சி சீமான் அண்ணாமலையை தொடர்ந்து தாக்குவதற்கு இது தான் காரணம் என்று பத்திரிக்கையாளர் பிரியன் கூறியுள்ளார்.
சீமானுக்கு வந்த பிரச்னை
சீமானின் கட்சிக்கு தொடர்ந்து நெருக்கடி வந்து கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக, கர்நாடகத்தை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கிய நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது.
பின்னர், படகு அல்லது பாய்மர படகு சின்னத்தை ஒதுக்கி தரும்படி நாம் தமிழர் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டும் தேர்தல் ஆணையம் அதனை நிராகரித்து மைக் சின்னத்தை உறுதி செய்தது.
பத்திரிக்கையாளர் பிரியன் கூறியது
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சீமான் அண்ணாமலை தொடர்ந்து தாக்குவதற்கான காரணத்தை பத்திரிக்கையாளர் பிரியன் கூறியுள்ளார். அவர் பேட்டி ஒன்றில், "நாம் தமிழர் கட்சி சின்னம் போனதற்கு ஒரு காரணம் அண்ணாமலை.
பாஜக கட்டுப்பாட்டில் தான் தேர்தல் ஆணையம் உள்ளது. தேர்தல் அதிகாரிகள் ஒரு காலத்தில் அமித் ஷா டீமில் இருந்தவர்கள் தான். அவர்கள் ஆளும் கட்சிக்கு ஜால்ரா அடிக்கின்றனர். சீமான் சின்னம் போனதற்கு வெளியில் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.
ஆனால், அதற்கு அண்ணாமலையும் ஒரு காரணம். நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடம் வந்தால் நாம் 4ம் இடத்திற்கு போவோம் என்ற பயத்தில் தான் சின்னத்தை பிடுங்க அண்ணாமலை திட்டம் போட்டுள்ளார்.
அதாவது, 2026 தேர்தலுக்கு முன் 3 -ம் இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் தான் அண்ணாமலை இதை செய்துள்ளார்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |