ஒரு ஜனாதிபதிக்கு இது தகுதியற்றது! ஜோ பைடனுக்கு எதிராக... புடினுக்கு ஆதரவாக களமிறங்கிய பிரபல நாட்டின் ஜனாதிபதி
ரஷ்ய ஜனாதிபதி புடின் குறித்து சர்ச்சைகுரிய கருத்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகன் கடுமையாக சாடியுள்ளார்.
ஏபிசி நியூஸ் நேர்காணலில், ரஷ்ய ஜனாதிபதி ஒரு கொலையாளி என்று நம்புகிறீர்களா என்று கேட்டபோது, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், நானும் அதை ஏற்கிறேன் என கூறினார்.
மேலும் 2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்ய தலையீட்டிற்கு பதிலடி கொடுப்பதாக உறுதியளித்தார். ஜோ பைடனின் சர்ச்சைக்குரிய கருத்தால் இரு நாட்டு உறிவில் சிறிய விரிசல் ஏற்பட்டது.
எனினும், ஜோ பைடன் கருத்து தொடர்பில் பதிலளித்த ரஷ்ய ஜனாதிபதி புடின், நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என வாழ்த்தினார். இதனிடையே, இந்த விவகாரத்தில் துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகன் புடினுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
புடின் குறித்த பைடனின் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது, அதற்கு புடின் அளித்த பதில் நேர்த்தியானது என எர்டோகன் கூறினார்.
புடின் குறித்த பைடனின் கருத்து ஒரு ஜனாதிபதிக்கு தகுதியற்றது என எர்டோகன் சாடினார்.