ஒற்றை தூணில் நிற்கும் சிவன்... பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன?
பொதுவாகவே சுற்றுலா செல்வதற்காக பலரும் தேர்ந்தெடுப்பது மர்மங்கள் நிறைந்த பகுதியை தான். அந்தவகையில் இந்தியாவில் ஒரு பகுதியில் இருக்கும் கோவிலானது ஒரு தூணின் வலிமையில் நிற்கின்றது. இந்த கோவிலுக்கு பலரும் வருகை தருகின்றார்கள்.
இந்த கோவில் இவ்வாறு உருவெடுத்து இருப்பதற்கு பல அறிவியல் காரணங்கள் இருந்தாலுமே, ஒரு சில மர்ம காரணங்கள் காணப்படுகின்றன. ஆகவே இந்த கோவில் இருக்கும் மர்மங்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தண்ணீருக்கு நடுவில் ஒற்றை தூணில் நிற்கும் சிவன்
இந்தியா என்றாலே நாம் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது கோவில்கள் தான். அங்கு காணப்படும் கோவில்களானது மனிதனின் மூளைக்கு எட்டாத வகையில் பல அதிசயங்கள் காணப்படும்.
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் கோவில், பேய்கள் கட்டிய கோவில், தண்ணீரில் மூழ்கும் கோவில் என பல வகையில் காணப்படுகின்றது. இது போலவே இந்தியாவில் குகை கோவில்களும் அதிகமாக காணப்படுகிறது. அதில் ஒன்று தான் ஒரே ஒரு தூணின் வலிமையில் நிற்கும் இந்த சிவன் கோயில்.
மகாராஷ்டிரா மாநிலம், அகமதுநகர் பகுதியில் அமைந்துள்ளது. ஹரிஷ் சந்திரகர் மலைகளில் அமைந்திருக்கும் இந்த கோவிலானது தண்ணீருக்கு மத்தியில் நான்கு தூண்களுக்கு நடுவில் அமைந்திருக்கிறது.
முதலில் 4 தூண்களுடன் கட்டப்பட்ட இந்த கோவிலானது, கதைகளின் படி, சத்ய யுகம், திரேதாயுகம், துவாபர யுகம் மற்றும் கலியுகத்தை குறிப்பதாக இந்த நான்கு தூண்கள் கட்டமைக்கப்பட்டது.
ஒரு யுகம் முடிவடையும் போது தானாகவே அக்கோவிலின் தூண் அழிந்து விடும். இந்த காரணத்தை அங்குள்ள கிராமவாசிகளும் காலம் காலமாக நம்பி வருகின்றார்கள் எனலாம்.
தற்போதைய காலக்கட்டமானது கலியுகம். இந்த யுகத்தை குறிக்கும் தூண் இடிந்து விழாமல் இருகின்றது. கலியுகம் முடிவடைந்தால், அந்த தூணும் இடிந்துவிழுந்துவிடும்.
அவ்வாறே நடந்துவிட்டால் இக்கோவிலுக்கு ஒரு நிலை இருக்காது.
மேலும் கோவில் நடுவில் இருக்கும் குளம், எப்போதுமே வற்றாதாம். ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும். கோடைகாலங்களில் குளிராகவும், குளிர்காலத்தில் வெப்பமாகவும் இதன் தண்ணீர் இருக்கும்.
இந்த தண்ணீரின் மத்தியில் தான் தூணும் சிவலிங்கமும் காணப்படுகின்றது. இதையடுத்து சிவனின் அருளைப்பெருவதற்கு இடுப்பளவு இருக்கும் தண்ணீரில் நடந்து செல்லவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.