இந்த முறை தோட்டா தப்பாது - ட்ரம்ப்பிற்கு தொலைக்காட்சியில் கொலை மிரட்டல் விடுத்த ஈரான்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கு அரசு தொலைக்காட்சி மூலம் ஈரான் கொலை மிரட்டல் விடுத்துள்ளது.
ஈரான் போராட்டம்
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், இதுவரை 2000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Credit : Reuters
மேலும், போராட்டக்காரர்களை கொலை செய்தால் அமெரிக்கா ராணுவ நடவடிக்கையில் ஈடுபடும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.
மேலும், தொடர்ந்து போராடுங்கள் உங்களுக்கான உதவி வந்து கொண்டிருக்கிறது என டிரம்ப் கூறியதன் மூலம் அமெரிக்கா ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டு ஆட்சி மாற்றம் செய்ய போகிறதா என்ற கருத்து எழுந்துள்ளது.

Credit x.com
அமெரிக்கா ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
ட்ரம்ப்பிற்கு கொலை மிரட்டல்
இப்படியாக இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ ரீதியிலான பதற்றம் நிலவி வரும் நிலையில், ஈரானின் அரசு தொலைக்காட்சி சேனலில் ட்ரம்ப்பிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
Iranian state TV airs a death threat to President Trump, translated: "this time the bullet won't miss." pic.twitter.com/GsYffmUzWy
— Tommy Robinson 🇬🇧 (@TRobinsonNewEra) January 14, 2026
2024 ஆம் ஆண்டில், பென்சில்வேனியாவில் நடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது, டிரம்ப் மீது ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் தோட்டா அவரது காதைத் துளைத்து சென்றது.
இந்த புகைப்பட பதாகையுடன் " இந்த முறை தோட்டா தவறாது" என பாரசீகத்தில் எழுதப்பட்டுள்ளது.
டிரம்ப் ஈரான் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள தயாராகி வரும் நிலையில், ஈரானின் அரசு தொலைக்காட்சியில் கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை அதிகரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |